tamilnadu

img

பருப்பு விலையும் கிடுகிடு உயர்வு

சென்னை:
சென்னையில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்பட பருப்பு வகைகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சில்லரை விற்பனையாளர்கள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் உளுந்து, துவரம் பருப்பு விலை மொத்த விற்பனையாளர்கள் விலையில் கடந்த வாரத்தை விட அதிகளவில் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் உளுந்தம் பருப்பு முதல் ரகம் ஒரு கிலோ ரூ.97 என விற்பனை செய்யப்பட்டு வந்தது.தற்போது கடும் விலை உயர்வை சந்தித்து ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. 2-வது ரக உளுந்தம் பருப்பும்கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.42 அதிகரித்து, ரூ.120-க்கு விற்பனையாகிறது. இதேபோல், துவரம் பருப்பு விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் முதல்ரக துவரம் பருப்பு ரூ.97-க்கு விற்பனையான நிலையில், ஒரு கிலோ ரூ.110-க்கும், 2-வது ரகம் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதேபோல் பாசி, மைசூரு பருப்பு உள்பட பருப்பு வகைகள் அனைத்தும் கடந்தவாரத்தை விட கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்து தான் காணப்படுகிறது. பருப்பு வகைகளை போலவே, பிற மளிகை பொருட்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. பெரிய மற்றும் குண்டு மிளகாய் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.15 வரையில் உயர்ந்துள்ளது. மிளகு, சீரகம், புளி ஆகியவற்றின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.கடந்த சில நாட்களாக பூண்டு விலையும் எகிறி வருகிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.38-க்கு விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட ஏலக்காய் விலை மட்டும் சற்று குறைந்து இருக்கிறது.

;